பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அவர் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜயவசந்தை எதிர்த்து போட்டியிட்டார். எனவே தேர்தலில் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்தியாவில் கொரோனா 2-ம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பல அரசியல் பிரபலங்பள், திரைப்பட பிரபலங்கள் என பலர் பாதித்து வருகின்றனர். மேலும் பல பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க அரசு தற்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்ப்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் வழிமுறைகளை பின்பற்றவும் வலியுறுத்தல் செய்துள்ளது

Related Stories:

>