யாரும் எங்க நாட்டுக்கு வராதிங்க.. இந்தியர்களுக்கு தடை போட்ட இலங்கை நாடு!

டெல்லி : இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே,அமெரிக்கா, பிரிட்டன், ஆஸி. உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் இந்தியா இடையேயான பயணத்துக்கு தடை விதித்துள்ளன. இவ்வகையில் இலங்கையிலும் இந்தியா இடையேயான பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை நீட்டிக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. எனினும், தடைக்காலம் எவ்வளவு நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்பது குறித்த தகவல்களை இலங்கை அரசு வெளியிடவில்லை. இதுதொடர்பாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நிலைமை தொடர்பாக சுகாதாரத்துறையிடம் இருந்து பெறப்பட்ட அறிவறுத்தலுக்கு ஏற்ப, இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள், இந்த நடவடிக்கை உடனடியாக அமல்படுத்தப்படும். உள்ளூர் சுகாதார அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தலின் படி இந்த கட்டுப்பாடு முடிந்த வரை விரைவாக மதிப்பாய்வு செய்யப்படும் என இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.

Related Stories:

>