×

ஒரு நாள் பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது, பலி 4,000ஐ தொடுகிறது : கை மீறும் நிலைமை; முழு ஊரடங்கு பிறப்பிக்க வலியுறுத்தல்!!

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,980 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 4,12,262 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,10,77,410 ஆக உயர்ந்தது.

* புதிதாக 3,980 பேர் உயிரிழந்துள்ளனர்.

* இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,30,168 ஆக உயர்ந்துள்ளது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,29,113 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,72,80,844 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  35,66,398 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் சதவிகிதம் 81.99% ஆக அதிகரித்துள்ளது.

* கொரோனாவால் உயிரிழந்தோர் சதவிகிதம் 1.09% ஆக அதிகரித்துள்ளது.

* கொரோனாவால் சிகிச்சை வெறுவோர் சதவிகிதம் 16.92% ஆக அதிகரித்துள்ளது.

* இதன் மூலம், நாட்டின் இதுவரை 16,25,13,339 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Tags : கொரோனா
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...