25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கிய கோமகனின் மறைவு நெஞ்சை நொறுக்கியது: இயக்குனர் சேரன் இரங்கல்!!

சென்னை : ஆட்டோகிராப் பட புகழ் பாடகர் கோமகனின் மறைவுக்கு இயக்குனர் சேரன் இரங்கல் தெரிவித்துள்ளர்.கோமகன் ஆட்டோகிராப் படத்தில், ஒவ்வொரு பூக்களுமே பாடல் மூலம் மிகவும் பிரபலமானவர். பார்வை மாற்றுத்திறனாளியான கோமகன், அரசின் மாற்றுத் திறனாளிகள் நலவாரிய நிர்வாக உறுப்பினராக இருந்தவர்.இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோமகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது மறைவிற்கு இயக்குனர் சேரன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வார்த்தைகள் இல்லை... மனதிலும் குரலிலும் முழுக்க தன்னம்பிக்கை கொண்ட மனிதர்... அவருடைய குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர்.. காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது..  கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும், என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

More
>