×

தமிழகத்தில் ஊரடங்கை ரத்து செய்யக்கோரி மனு: பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தமிழகத்தில் ஊரடங்கை ரத்து செய்யக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கொரோனா 2ம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  கொரோனா முதல் அலையின்போது அமலில் இருந்த ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். முதல் அலையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்தே இன்னும் அவர்கள் மீளவில்லை.

ஊரடங்கால் கொரோனா தொற்று பரவல் குறையும் என அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. இப்படிப்பட்ட சூழலில் மீண்டும் ஊரடங்கு என்பது, பலரது இயல்பு வாழ்க்கையை பாதிக்கும். எனவே, இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கிற்கு தடை விதிக்க வேண்டும். இதற்கான உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி ஆகியோர், மனுவிற்கு மத்திய உள்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 3க்கு தள்ளி வைத்தனர்.

Tags : Tamil Nadu ,Icourt Branch , Petition seeking cancellation of curfew in Tamil Nadu: ICC branch order to respond
× RELATED வைகை, காவேரி, குண்டாறு இணைப்பு தமிழக...