புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சென்னை: புதிய கட்டுப்பாடுகளை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். அதில், காய்கறி,் மளிகை கடைகள் அரசின் அறிவுறுத்தலின்படி 12 மணிக்கு மூடப்படுவதை  உறுதிப்படுத்த வேண்டும். இதர கடைகள் திறக்க அனுமதிக்கக் கூடாது. தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காசிமேடு, கோயம்பேடு வளாகங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். நாளிதழ் மற்றும் பால் வினியோகம் செய்யும் நபர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்க வேண்டும் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

Related Stories:

>