×

ஐரோப்பிய சாம்பியன் லீக் முதல்முறையாக பைனலில் மான்செஸ்டர் சிட்டி

மான்செஸ்டர்: ஐரோப்பிய சாம்பியன் லீக்   அரையிறுதி போட்டியில்  பிஎஸ்ஜி அணியை வீழத்திய மான்செஸ்டர் சிட்டி முதல்முறையாக  இறுதிப்போட்டிக்கு  தகுதிப் பெற்றது.  ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து தொடரின்  அரையிறுதி போட்டியின் முதல் சுற்றுகள் கடந்த வாரம் நடந்தன.  ஸ்பெயினில் நடந்த  முதல் சுற்றின் முதல் ஆட்டத்தில்  ரியல்  மாட்ரிட்(ஸ்பெயின்)-செல்சீ(இங்கிலாந்து) அணிகள் 1-1 என்ற கணக்கில் டிரா  செய்தன. பிரான்சில் நடந்த முதல் சுற்றின் 2வது போட்டியில்  இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி 2-1 என்ற கோல்கணக்கில் பிரான்சின்  பாரிஸ்  செயின்ட் ஜெர்மைன்(பிஎஸ்ஜி) அணியை வீழ்த்தியது.  இந்நிலையில் அரையிறுதி போட்டியின் 2வது  சுற்றின் முதல் ஆட்டம் இங்கிலாந்தில் நேற்று நடந்தது. அதில் மான்செஸ்டர் சிட்டி-பிஎஸ்ஜி அணிகள் மீண்டும் மோதின.  இரு அணிகளும் வெற்றிப் பெற முனைப்பு காட்டின. ஆனாலும் மான்செஸ்டர் அணியின் ரியாத் மஹ்ரெஸ்  ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் முதல் கோல் அடித்ததால் அந்த அணி முதல்பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில்  முன்னிலை பெற்றது.  

ஆட்டத்தின் 2வது  பாதியிலும் மான்செஸ்டரே ஆதிக்கம் செலுத்தியது. அதை பயன்படுத்தி ஆட்டத்தின் 63வது நிமிடத்தில், ரியாத் மஹ்ரெஸ் மீண்டும் கோல் அடித்தார். அதன் பிறகு மான்செஸ்டர் தடுப்பு ஆட்டத்தில் இறங்க,  பிஎஸ்ஜியின் குறிப்பாக, நட்சத்திர ஆட்டக்காரர் ெநய்மர் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.  இடையில் மோதலில் ஈடுபட்ட பிஎஸ்ஜி வீரர் ஏஞ்சலோ மரியா 69வது நிமிடத்தில்   ‘சிவப்பு அட்டை’ காட்டி வெளியேற்றப்பட்டார். அதனால் பிஎஸ்ஜி 10 வீரர்களுடன் விளையாடியது. அதற்கேற்ப ஆட்டத்தின் முடிவில்  மான்செஸ்டர் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது. அரையிறுதிப் போட்டி 2சுற்றுகளின் முடிவில் மான்செஸ்டர் 4-1 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலைப் பெற்றதுடன் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கும்
முன்னேறியது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் செல்சீ-ரியல் மாட்ரிட் அணிகள் மோதுகின்றன. அதில் வெற்றிப் பெறும் அணி இறுதிப்போட்டியில்  மான்செஸ்டர் சிட்டியை எதிர்கொள்ளும்.

Tags : Manchester City ,European Champions League ,
× RELATED இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் பிரம்மிப்பூட்டும் பலூன் கண்காட்சி..!!