×

104 வயதான பிஷப் பிலிப்போஸ் மார் கிறிஸ்டோடம் மறைவு

திருவனந்தபுரம்: மார்த்தோமா   சபை முன்னாள் தலைவர் டாக்டர் பிலிப்போஸ் மார் கிறிஸ்டோடம். கேரள மாநிலம்   பத்தனம்திட்டா மாவட்டம் கும்பநாட்டில் 1918 ஏப்ரல் 27ம் தேதி பிறந்தார்.   1940ல் அங்கோலா ஆஸ்ரமத்தில் சேர்ந்தார். 1943ல் பெங்களூருவில் உள்ள   இறையியல் கல்லூரியில் பாதிரியார் பட்டம் பெற்றார். 1944ல் இறைப்பணியை   தொடங்கினார். பெங்களூரு, கேரள மாநிலம் ெகாட்டாரக்கரை, மயிலம் உள்பட பல்வேறு   இடங்களில் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார். கடந்த 1963ல்  கிறிஸ்தவ  மிஷனரி பிஷப்பாக நியமிக்கப்பட்டார். 104 வயதை எட்டியவர்,  உலகிலேயே மிக  வயதான பிஷப் என்ற பெருமையை பெற்றவர்.  இந்நிலையில் திடீரென உடல்நல குறைவு   ஏற்பட்டதால் கும்பநாடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால்   சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சுமார் 1.15 மணிக்கு காலமானார். அவரது   உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. டாக்டர் பிலிப்போஸ் மார்   கிறிஸ்டோடம் மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் பினராய்   விஜயன், முன்னாள் முதல்வர்கள் உம்மன்சாண்டி, ஏ.கே.அந்தோணி உட்பட பலரும்   இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : Bishop ,Philippos Mar Christodoum , Death of 104-year-old Bishop Philippos Mar Christodoum
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் குருத்தோலை பவனி