தன்பாத்-ஆலப்புழா ரயில் சென்ட்ரலில் நிற்காது

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை, சென்ட்ரல்-அரக்கோணம் இடையேயான வழித்தடத்தில் வியாசர்பாடியில் பராமரிப்பு பணி நடக்கிறது. இதையடுத்து தன்பாத்தில் இருந்து ஆலப்புழா செல்லும் ரயில் சென்ட்ரலில் நிற்காது. இன்று இரவு 11.50 மணிக்கு பெரம்பூரில் நின்று செல்லும். இதேபோல், வரும் 12ம் தேதி காலை 11.40 மணிக்கு தன்பாத்தில் இருந்து ஆலப்புழா புறப்படும் 13ம் தேதி இரவு 11.50 மணிக்கு பெரம்பூரில் நின்று செல்லும். சென்ட்ரல் ரயில்நிலையத்தில் நிற்காது’ எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>