பாலிவுட் படத்தொகுப்பாளர் கொரோனாவுக்கு பலி

சென்னை: பாலிவுட் படத்தொகுப்பாளர் அஜய் சர்மா கொரோனா பாதிப்பு காரணமாக மரணம் அடைந்தார். லூடோ, ஜக்க ஜசூஸ், கார்வான், ராஷ்மி ராக்கெட் போன்ற இந்தி படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய அவர், கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு டெல்லியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு சுவாசிக்க ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வேண்டும் என்ற கோரிக்கையை தயாரிப்பாளர் அசோக் பண்டிட் டிவிட்டரில் வெளியிட்டு இருந்தார். தொடர்ந்து அஜய் சர்மா சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருக்கு மனைவி, மகன் உள்ளனர்.

Related Stories:

>