×

முழு முடக்கம் ஒன்றே தீர்வு: தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை

சென்னை: கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் இறப்பும் அதிகரித்து வருவதால் முழு முடக்கம் ஒன்றே தீர்வு என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் மருத்துவர் செந்தில் விடுத்துள்ள அறிக்கையில் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர், ஆக்சிஜன் போன்றவை இல்லாததால் சிகிச்சையில் அவர்களின் பங்களிப்பு குறைந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொற்றை கையாள முழு முடக்கம் ஒன்றே வழி என்றும் முழு முடக்கத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். முழு முடக்க காலத்தை ஆக்சிஜன் படுக்கைகளை உயர்த்த, ஆக்சிஜன் உற்பத்தியை உயர்த்த, ஆக்சிஜனை பகிர்ந்தளிக்க பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தற்போது நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆக்சிஜன் படுக்கைகள் போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்துள்ள மருத்துவர் செந்தில் நோயாளிகளுக்கு ஏற்றவாறு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்பது தமிழகத்தில் உள்ள 18,000 அரசு மருத்துவர்களின் கோரிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்.



Tags : Tamil Nadu Government Doctors Association ,Government of Tamil Nadu , corona
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...