×

உதகை அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்து வந்த காட்டுயானை ரிவால்டோ பிடிபட்டது

உதகை: உதகை அருகே வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்து வந்த காட்டுயானை ரிவால்டோ கூண்டிற்குள் அடைக்கப்பட்டது. உதகை அருகே சிங்கார வனப்பகுதிக்கு கடந்த 2012ஆம் ஆண்டில் ஆண் காட்டுயானை ஒன்று தும்பிக்கையில் காயத்துடன் வந்தது. அந்த யானைக்கு காயம் குணமடைய பழங்களில் மருந்து, மாத்திரைகள் வைத்து சாப்பிட அளிக்கப்பட்டதால் அந்த யானை பொதுமக்களுடன் சகஜமாக பழகியது.

அத்துடன் அந்த யானைக்கு பிரபல கால்பந்து வீரர் ரிவால்டோவின் பெயர் வைத்தும் அழைத்தார்கள். ஆனால் தொடக்கத்தில் கிராமத்தை ஒட்டி சுற்றித்திரிந்த அந்த யானை பின்னர் வாழைத்தோட்டம் குடியிருப்புக்குள் வீடுகளை சேதப்படுத்தியதால் மக்கள் அந்த யானையை பிடிக்க கோரிக்கை விடுத்தனர்.
 
அந்த யானையின் தும்பிக்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியாத நிலை இருந்தது. மேலும் 2 மாதங்களுக்கு முன்பு ரிவால்டோவை நடக்க வைத்து முதுமலைக்கு அழைத்து செல்லும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து வாழைத்தோட்டம் பகுதியிலேயே மரக்கூண்டு அமைத்து ஒருவாரமாக ரிவால்டோவுக்கு பிடித்த உணவு போடப்பட்ட நிலையில் இன்று காலை ரிவால்டோ கூண்டிற்குள் அடைப்பட்டது. இதனிடையே ரிவால்டோ காட்டுயானை பத்திரமாக கூண்டிற்குள் நின்று கொண்டிருப்பதால் வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் வாழைத்தோட்டம் கிராம பொதுமக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.



Tags : Rivaldo ,Udaipur , The wild elephant
× RELATED இந்தியாவின் உதய்பூர் நகரில் பழங்கால கார்கள் காட்சிக்கு வைப்பு!!