×

கொரோனா விவகாரத்தில் பீகார் அரசை நம்பியதற்காக வெட்கப்படுகிறோம்!: பாட்னா உயர்நீதிமன்றம் கண்டனம்..!!

பாட்னா: கொரோனா விவகாரத்தில் பீகார் அரசை நம்பியதற்காக வெட்கப்படுவதாக பாட்னா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பீகாரில் கொரோனா பரவல் அதிகரித்திருக்கும் நிலையில், ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என பாட்னா உயர்நீதிமன்றம் அறிவுறுத்திய பின்னர், அங்கு வரும் 15ம் தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்து பீகார் மாநில முதல்வர் நித்தீஷ்குமார் தெரிவித்தார். இந்நிலையில் கொரோனா பரவல் தொடர்பாக வழக்கு ஒன்றின் விசாரணையின் போது நீதிபதிகள் சக்ரதாரி, சரண்சிங் மற்றும் மோஹித் குமார் ஷா அடங்கிய அமர்வு, மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் நித்தீஷ்குமார் அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார். 


இந்த வழக்கில் நேரில் ஆஜரான மத்திய கூடுதல் சொலிசிட்டல் ஜெனரல் கே.என்.சிங்கிடம், பீகாரில் சுகாதாரத்துறையை ராணுவ கட்டுப்பாட்டில் ஒப்படைக்க முடியுமா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அவ்வாறு முடியும் என்றால் அதற்கான உத்தரவை கொடுக்க தயார் என்றும் தெரிவித்தனர். மேலும் கொரோனா கட்டுப்படுத்தும் என  நித்தீஷ்குமார் அரசை நம்பியதற்காக வெட்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 



Tags : Bihar ,Batna High Court , Corona, Bihar, Shame, Patna High Court
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!