விஜய் மல்லையா, நீரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்புங்கள்!: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் மோடி வலியுறுத்தல்..!!

டெல்லி: விஜய் மல்லையா, நீரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்புங்கள் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம்  மோடி வலியுறுத்தியுள்ளார். வங்கி மோசடியில் ஈடுபட்டு கைதாகி தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும்படி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம்  கேட்டுக் கொண்டார். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இணைந்து செயலாற்றுவது குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார். 

அப்போது இந்தியாவில் பல ஆயிரம் கோடி வங்கி மோசடியில் ஈடுபட்டு தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள  விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும்படி பிரதமர் மோடி, போரிஸ் ஜான்சனிடம் கோரிக்கைவிடுத்தார். பொருளாதார குற்றவாளிகளை அவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்து சட்டப்படி தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். 

இதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும், முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதி அளித்தார். இந்த உரையாடலின் போது, இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

Related Stories:

More