குவியும் பாராட்டு!: முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு காங்., மனிதநேய ஜனநாயக கட்சி, ஆம் ஆத்மி தலைவர்கள் வாழ்த்து..!!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசு, மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கட்சியினர் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றினர். தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பதவியேற்க உள்ளார். 

இதையடுத்து சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் பல்வேறு தரப்பினர் மு.க.ஸ்டாலினுக்கு 3வது நாளாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசு, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் உள்ளிட்டோர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இதேபோல் சமூக, சமத்துவ படையின் தலைவர் சிவகாமி உள்ளிட்ட ஏராளமானோர் அறிவாலயத்திற்கு நேரில் வந்து முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு 3வது நாளாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Related Stories:

>