தர்மபுரி அருகே கொரோனா சிகிச்சை மையத்தில் திறந்தவெளியில் மருத்துவக்கழிவு வீச்சு: தொற்று பரவும் அபாயம்

தர்மபுரி: தர்மபுரி அருகே தனியார் பொறியியல் கல்லூரி கொரோனா சிகிச்சை பிரிவில் பயன்படுத்திய மருத்துவக்கழிவுகள் மற்றும் பயன்படுத்திய கொரோனா தடுப்பு ஆடைகள், திறந்த வெளியில் குவித்து வைக்கப்பட்டுள்ளதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தர்மபுரி அருகே நல்லாம்பட்டி தனியார் பொறியியல் கல்லூரியில், கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சைக்கு பயன்படுத்திய, மருத்துவ கழிவுகள் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ அலுவலர்கள் அணிந்திருந்த, கொரோனா தடுப்பு கவச உடைகளை வளாகத்தில் திறந்தவெளியில் குவித்து வைத்துள்ளனர்.

இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், திறந்தவெளியில் போட்டு வைத்துள்ள கொரோனா தடுப்பு உடைகள் மற்றும் மருத்துவ கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கொரோனா சிகிச்சை பிரிவில், குடிநீர் தட்டுப்பாடும் உள்ளதால், அதை சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>