×

ஐபிஎல் டி20 போட்டி: மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஜ டெல்லி உயர்நீதிமன்றத்தில் தகவல்

மும்பை: மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை காலவரையின்றி ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஜ டெல்லி உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. அணிகளின் வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதியானதால் ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  ஐ.பி.எல். போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத இருந்தது. இந்நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், ஐதராபாத் அணி விர்த்திமான் சஹா, டெல்லி அணியின் அமித் மிஷ்ராவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 


சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி மற்றும் ஒரு உதவியாளருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து நடப்பு ஐபிஎல் 20-20 தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். மே 30ந்தேதி வரை போட்டிகள் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளுக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அணி வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : IPL T20 ,IPL ,BCCI ,Delhi High Court , IPL T20 match, IPL match, BCCJ, Delhi High Court
× RELATED 2025ம் ஆண்டுக்கான மெகா ஏலம்; 8 வீரர்களை...