×

தன்னம்பிக்கையில் வாமனன் அவதாரம்: மூன்றரை அடி சிறுவன் கராத்தே போட்டியில் பதக்கம் குவிப்பு: தேசிய போட்டியில் பங்கேற்க நிதி உதவிக்காக காத்திருப்பு

பேராவூரணி: பேராவூரணி அருகே மூன்றரை அடி உயரமுள்ள சிறுவன் தற்காப்பு கலையில் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் குவித்து தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள நிதியுதவிக்காக காத்திருக்கிறார்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் செருவாவிடுதி தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்,(39), கரூரில் தேங்காய் உறிக்கும் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைைவி மாரியம்மாள் (35) விவசாய கூலி தொழிலாளி. இவர்களின் இரண்டாவது மகன் நிகேசன்,(14),. இவர் சித்துக்காடு அரசு நடுநிலைப்பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 3.9 அடி உயரமும், 24 கிலோ எடையும் கொண்டவர். தாம் குள்ளம் என்பதை பொருட்படுத்தாமல் சிறுவயதிலிருந்தே துறுதுறுவென்று இருப்பாராம். 6ம் வகுப்பு படிக்கும் போது, பள்ளியில் நடந்த தற்காப்பு கலை பயிற்சியில் சேர்ந்தார். திருச்சிற்றம்பலத்தில் வனப்புலிகள் தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு பயற்சி பள்ளி நடத்தி வரும் சேக்அப்துல்லா என்பவர், நிகேசன் திறமையை பார்த்து, தற்காப்பு பயிற்சியில் அவருக்கு இலவச பயிற்சி அளித்தார்.

பயிற்சி பெற்ற நிகேசன், மாவட்ட, மாநில தேசிய போட்டிகளில் கலந்து பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்றார். ஹரியானா மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் வெள்ளி பதக்கம், சென்னை மற்றும் நாமக்கலில் நடந்த மாநில அளவிலான குத்துச்சண்டை மற்றும் கராத்தே போட்டிகளில் இரண்டு வெள்ளி பதக்கமும், திருச்சியில் நடந்த மாநில அளவிலான குடோ போட்டியில் ஒரு தங்கம் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வாங்கி குவித்தார்.
இந்நிலையில், அடுத்த மாதம் ஹிமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் தேசியளவிலான போட்டியிலும், தற்காப்பு கலை சங்கத்தினர் நடத்தும் போட்டியிலும் கலந்து கொள்ள உள்ளார். இந்த போட்டிகளில் கலந்துக்கொள்ள போதிய நிதி வசதி இல்லாமல் உள்ளார். இவர் தேசிய போட்யில் பங்கேற்க அடுத்தவர் உதவியை நாடி வருகிறார்.

Tags : Vamanan , Vamana incarnates in self-confidence: Three-and-a-half-foot boy accumulates medals in karate competition: Waiting for financial help to participate in national competition
× RELATED மது விற்பனை: 6 பேர் மீது வழக்கு