ஊட்டி - கூடலூர் சாலையில் விரிவாக்க பணிகள் மும்முரம்

ஊட்டி: மேட்டுப்பாளையம் முதல் கூடலூர் வரை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலை செங்குத்தான மலை மற்றும் மலை சரிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், மேட்டுப்பாளையம் முதல் கூடலூர் வரையில் உள்ள சாலை மிகவும் குறுகலாகவும், அதேசமயம் அதிகளவு வளைவுகளை கொண்டதாகவும் இருக்கும். தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டிற்குள் சென்ற பின், இச்சாலையை சீரமைக்கும் மற்றும் விரிவுப்படுத்தும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் வருவதால், இச்சாலை விரிவுப்படுத்துவதில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினருக்கு சிக்கலும் ஏற்பட்டது.இருப்பினும், வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இல்லாத தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் தற்போது சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்தது வருகிறது.

குறிப்பாக, ஊட்டி முதல் கூடலூர் வரையில் சாலையின் பல பகுதிகளிலும் தற்போது சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது பிங்கர்போஸ்ட் முதல், பைக்காரா வரையில் பல இடங்களில் சாலையோரங்களில் உள்ள திட்டுக்கள் கரைக்கப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அங்காங்கே தடுப்பு சுவர்கள் கட்டும் பணிகள் மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் கான்கிரீட் கலவைகள் கொட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Stories:

>