×

சத்தி வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ரூ.3.90 லட்சத்திற்கு வாழைத்தார் ஏலம்

சத்தியமங்கலம்:  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளான பவானிசாகர், புஞ்சை புளியம்பட்டி, அரசூர், கெம்பநாயக்கன்பாளையம், சிக்கரசம்பாளையம், புதுவடவள்ளி, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் வாழை பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் வாழைத்தார்கள் சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நடைபெறும் ஏலத்திற்கு கொண்டு வருவது வழக்கம். நேற்றுமுன்தினம் நடைபெற்ற வாழைத்தார் ஏலத்திற்கு சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் 2160 வாழைத்தார்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

வாழைத்தார்களை ஏலம் எடுப்பதற்காக திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்தனர். ஏலத்தில் கதலி ரகம் கிலோ ஒன்றுக்கு ரூ.24க்கும், நேந்திரன் கிலோ ரூ.39க்கும் ஏலம் போனது. செவ்வாழை தார் ஒன்று ரூ.650க்கும், தேன்வாழை 580க்கும், ரஸ்தாளி 545க்கும், ரொபஸ்டா 390க்கும், மொந்தன் 200க்கும், பச்சை நாடன் 380க்கும் ஏலம் போனது. மொத்தம் 2160 வாழைத்தார்கள் ரூ.3.90 லட்சத்திற்கு விற்பனையானது. ஏலம் முடிந்தவுடன் வியாபாரிகள் வாழைத்தார்களை வாகனங்களில் லோடு ஏற்றி விற்பனைக்காக கொண்டு சென்றனர்.

Tags : Satti Agricultural Co-operative Society , At Satti Agricultural Cooperative Society The auction was held for Rs 3.90 lakh
× RELATED சத்தி வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ரூ.4 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்