மேற்குவங்க மாநிலத்தின் முதல்வராக 3வது முறையாக பதவியேற்றார் மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக 3வது முறையாக மம்தா பானர்ஜி பதவியேற்றார். மம்தாவுக்கு மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகையில் மம்தா பானர்ஜி பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெற்று. நடத்து முடிந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் 213 இடங்களை பிடித்து திரிணாமுல் காங்கிரஸ் 3 வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ள. 66 வயதாகும் மம்தா பானர்ஜி காலில் காயமடைந்த நிலையிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றுள்ளார் என்பது முக்கியமான ஒன்றாகும்.

இதனை தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் கட்சியின் சட்டசபை தலைவராக  மம்தா பானர்ஜி  தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு காரணமாக  பதவியேற்பு நிகழ்வு எளிமையாக நடைபெற்றது. மம்தா பானர்ஜி போட்டியிட்ட தொகுதியில் தோல்வியைத் தழுவினார். ஆனால் மம்தா முதல்வர் பதவியேற்க எந்தத் தடையும் இல்லை. பதவியேற்ற 6 மாத காலத்துக்குள் அவர் ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற வேண்டும். கடந்த 2011-ம் ஆண்டு முதல்வராக பதவியேற்கும் போது மம்தா பானர்ஜி எம்எல்ஏ-வாக இல்லை என்பது தெரிந்த ஒன்றாகும். முதல்வரான சில மாதங்கள் கழித்து போவானிபூர் தொகுதியில் போட்டியிட்டு மம்தா பானர்ஜி வென்றார். அந்த போன்று தற்போது நடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>