துணை நிலை ஆளுநர் உத்தரவுப்படி புதுச்சேரியில் 14வது சட்டப்பேரவை கலைப்பு!: அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

புதுச்சேரி: துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவுப்படி புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கலைக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க அக்கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி நேற்றைய தினம் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து உரிமை கோரியிருந்தார். இந்நிலையில் அங்கு ஏற்கனவே உள்ள 14வது சட்டமன்றம் துணை நிலை ஆளுநர் உத்தரவுப்படி மே மாதம் 3ம் தேதி கலைக்கப்பட்டதாக சட்டமன்ற செயலாளர் முனுசாமி அதிகாரபூர்வமாக அறிவித்தார். 

இதையடுத்து விரைவில் புதிய அரசை அமைக்க துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அழைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில், என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் 2 இடங்களிலும், திமுக 6 தொகுதியிலும், சுயேச்சைகள் 6 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர். 

16 இடங்களில் வெற்றி பெற்றுள்ள என்.ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. இதனிடையே, புதுச்சேரியின் 14-வது சட்டப்பேரவை, துணை நிலை ஆளுநரின் ஆணைப்படி மே.3ம் தேதி கலைக்கப்பட்டதாக புதுச்சேரி சட்டப் பேரவை செயலகத்தின் செயலர் முனிசாமி அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>