ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து

சென்னை: தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.  இதுகுறித்து சங்கத்தின் தலைவர் அப்சல் நேற்று வெளியிட்ட வாழ்த்து செய்தி:  நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான மக்களின் ஆதரவை பெற்று அமோக வெற்றி அடைந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொள்கிறோம். இனிவரும் காலங்களில் உங்களது தலைமையிலான அரசாங்கம் தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆக்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>