காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மனைவி ஜெசிந்தா காலமானார்: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை:  தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினருமான பீட்டர் அல்போன்ஸின் மனைவி ஜெசிந்தா. இவர் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் அண்ணாநகர் சாந்திகாலனியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக, பீட்டர் அல்போன்ஸ் தனது டிவிட்டர் பதிவில், ‘46 ஆண்டு காலம் என்னோடு இல்லறம் நடத்தி எனக்கும்  என் பிள்ளைகளுக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காக இருந்த என் மனைவி இன்று இறைவனடி சேர்ந்தார்.

இறுதிச் சடங்குகள் 5ம்தேதி மதியம் 12 மணிக்கு அண்ணா நகர், புனித லூக்கா ஆலயத்தில் நடைபெறும்’’” எனப் பதிவிட்டுள்ளார். இவர்களுக்கு நவீன் மற்றும் அனன்சியா என்ற இரு குழந்தைள் உள்ளனர். ஜெசிந்தாவின் மறைவுக்கு கே.எஸ். அழகிரி உள்பட தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சென்று  அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Related Stories:

More
>