×

திரையுலகம் சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா: தியேட்டர் அதிபர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியதாவது: திமுக வெற்றி பெறும் ஒவ்வொரு முறையும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன், கலைஞர் கலந்து கொள்ளும் முதல் பாராட்டு விழா திரையுலகினரின் பாராட்டு விழாவாகத்தான் இருக்கும். ஏனென்றால், திரையுலகை எப்போதுமே தனது தாய் வீடு என் பார்.இந்த முறையும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், நடிகர் சங்கம், பெப்ஸி என அனைத்தும் இணைந்து புதிய அரசுக்கு பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்து  கொண்டிருக்கிறோம். இந்த கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன், மு.க.ஸ்டாலின் எங்களுடைய பாராட்டு விழாவில்தான் கலந்து கொள்வார் என்று நம்புகிறோம்.

கலைஞர் இருக்கும்போது, திரைத்துறையினருக்கு ஏராளமான சலுகைகள் செய்தார். இந்தியாவிலேயே முதன்முறையாக வரியை குறைத்தது கலைஞரின் ஆட்சியில் தான்.  சென்னை மேயராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, பெரிய அளவுக்கு முன்னேற்றத்தைக் கொண்டு வந்துள்ளார். சென்னையில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்ததுபோல், தமிழகத்திலும் பெரிய மாறுதலைக் கொண்டு வருவார். எங்களுடைய  கோரிக்கைகளைச் சொன்னால் நிச்சயமாக மு.க.ஸ்டாலின் கேட்பார் என்று நம்புகிறோம்.

இந்த கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளானது தமிழ்த் திரையுலகம்தான். 8 சதவீதம் உள்ளாட்சி வரி இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் இருக்கிறது.  இதை நீக்குவதற்கு கடந்த 4 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். இந்த வரியை நீக்கிவிட்டால் டிக்கெட் கட்டணம் குறையும். இவ்வாறு திருப்பூர் சுப்ரமணியம் கூறினார்.

Tags : MK Stalin ,Theater Principals Association , Tribute to MK Stalin on behalf of the film industry: Announcement by the Theater Principals Association
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...