×

அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை கொரோனா விதிமுறை மீறிய பிரபல நகை கடைக்கு சீல்

சென்னை: தமிழகத்தில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஓரளவுக்கு கொரோனா தொற்று குறைந்திருந்தது. இந்நிலையில் தற்போது இரண்டாம் கட்டமாக வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, சென்னை மற்றும்  சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் நகை கடைகள், மால்கள், வணிக நிறுவனங்கள் போன்றவை கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறுகின்றனவா என மாநகராட்சியினர்,  வருவாய் துறையினர் கண்காணித்து அபராதம் விதித்து, சீல்  வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், பழைய மகாபலிபுரம் சாலை காரப்பாக்கத்தில் இயங்கி வரும் 3000 சதுரடிக்கு மேல் கொண்ட பிரபல நகைக்கடை கொரோனா விதிமுறையை மீறியதாக  சென்னை மாநகராட்சி 15வது மண்டல உதவி ஆணையர் சுகுமார்  தலைமையில், வருவாய்துறை அதிகாரிகள் அதிரடியாக அக்கடையை மூடி சீல் வைத்தனர். இதனையடுத்து, கடையின் உள்ளே இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் 65க்கும் மேற்பட்டோரை மாநகராட்சியினர் எச்சரித்து  வெளியேற்றினர்.

Tags : Corona , Authorities seal the popular jewelry store in violation of the Corona rule of action
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...