டெய்லர் ரெடியா?

நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் தொடை எலும்பு முறிவு காரணமாக வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் இருந்து விலகினார். அதிலிருந்து குணமான நிலையில் சதை பிடிப்பால் அவதிப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் ஜூன்  மாதம் நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட்கள்,  இந்தியாவுக்கு எதிரான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அவர் விளையாடுவரா என்ற கேள்வி எழுந்துள்ளது.  அது குறித்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட், அவர்  பயிற்சியில் இருக்கிறார். மருத்துவக்குழு என்ன சொல்கிறது என்று பார்க்கவேண்டும். ‘பயணத்திற்கு இன்னும் நேரம் இருக்கிறது. அதனால் பிரச்னை இல்லை’ என்றும் தெரிவித்துள்ளார். கூடவே ஐபிஎல் தொடரில் விளையாடும் நியூசி வீரர்கள்  கேன் வில்லியம்சன், டிரெனட் போல்ட், மிட்செல் சான்ட்னர், கேல் ஜாமிசன் ஆகியோர் ‘குவாரன்டைன்’ காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரை தவற விடுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ள  நிலையில் அவர்கள் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்பதில் பிரச்னை இருக்காது.

Related Stories:

More