×

வான்கடே ஸ்டேடியத்தில் `தல’ அடித்த சிக்சருக்கு நினைவுச்சின்னம்!.. ரசிகர்கள் கொண்டாட்டம்

மும்பை: 2011 உலகக் கோப்பை போட்டியின் கோப்பைக்கான இறுதி ஆட்டம், மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. பரபரப்பாக நடைபெற்ற அந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் டோனி இறுதியில் சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். அந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 28 ஆண்டுகள் கழித்து 2வது முறையாக உலக கோப்பையை வென்றது. இதில் அவர் அடித்த இறுதி சிக்ஸர் எந்த இருக்கை பகுதியில் விழுந்ததோ, அந்த பகுதி இருக்கைக்கு டோனி பெயரை சூட்ட வேண்டும். அவரது மிக உயர்ந்த பங்களிப்பிற்கு நன்றி செலுத்தும் விதமாக அவரது பெயரில் நிரந்தர இருக்கை அமைக்க வேண்டும் என 2020ம் ஆண்டு மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு (எம்.சி.ஏ.) மும்பை கிரிக்கெட் சங்க அப்பெக்ஸ் கவுன்சில் உறுப்பினர் அஜிங்ய நாயக் கடிதம் எழுதினார்.

இந்நிலையில் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் (எம்சிஏ) தலைவர் அமோல் காலே அளித்துள்ள பேட்டியில், ‘எம்எஸ் டோனி’ அடித்த ‘வெற்றி சிக்ஸர்’க்கு வான்கடே மைதானத்தில் நினைவு சின்னம் அமைக்கப்பட உள்ளது. டோனி அடித்த சிக்ஸரின் பந்து விழுந்த அந்த இடத்தில் சிறிய அளவில் ஒரு வெற்றி நினைவு சின்னம் சிறப்பாக அமைக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
இது தல டோனி ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். மும்பை வான்கடே மைதானம் என்பது இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்ற மைதானம் ஆகும். இதற்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட சில வீரர்கள் இதே போல கவுரவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post வான்கடே ஸ்டேடியத்தில் `தல’ அடித்த சிக்சருக்கு நினைவுச்சின்னம்!.. ரசிகர்கள் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Sixer ,Wankhede Stadium ,Mumbai ,2011 World Cup ,Dinakaran ,
× RELATED ரஞ்சிக் கோப்பையை வென்றது மும்பை அணி..!!