×

மணமகன் உத்தரபிரதேசம் - மணமகள் இமாச்சல் பிரதேசம்; ஆன் லைனில் நடந்த கல்யாண வைபவம்: எல்லாவற்றையும் மாற்றிவிட்டது கொரோனா

லக்னோ: கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் பரவல் அச்சத்தால், உத்தரபிரதேசம் மற்றும் இமாச்சல் பிரதேச ஜோடிகளுக்கு இடையே ‘கூகுள் மீட்’ மூலம் திருமணம் நடந்தது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகள் முதல் ெபரியவர்கள் வரையிலான மகிழ்வான நேரங்கள் முதல் துக்கரமான நிகழ்வுகளில் பங்கேற்று ஆறுதல் கூறுதல் வரை அனைத்தும் மாறவிட்டது. விழாக்களை போல் நடத்தப்படும் திருமணங்கள் கூட தற்போது ஸ்மார்ட் திருமணங்களாக நடக்கிறது. ஆன்லைன் திருமணங்களும் நடக்கின்றன.

அந்த வகையில், உத்தரபிரதேசத்தின் மொராதாபாத்தைச் சேர்ந்த மோஹித் சவுகான் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் மண்டியைச் சேர்ந்த பிரதிபா தாகூர் ஆகிய இருவரும் ஆன்லைனில் திருமணம் செய்து கொண்டனர். சாப்ட்வேர் இன்ஜினியர்களான இருவரும், ஆன்லைனில் செய்து கொண்ட திருமணத்தில் இருதரப்பு குடும்பத்தினரும், உறவினர்களும் நேரடியாக பங்கேற்கவில்லை. ஆனால், மணமகனுக்கும், மணமகளுக்கும் ஆன்லைனில் ஆசீர்வாதம் அளித்தனர். இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால், திருமணத்தை நடத்தி வைத்த பண்டிதரும் ஆன்லைனில் ஸ்பீக்கர் வசதியுடன் மந்திரங்களை கூறினார். மணமக்களும் பண்டிதர் கூறியபடி, சடங்குகளை செய்தனர்.

இதுகுறித்து மணமகனின் உறவினர்கள் கூறுகையில், ‘தம்பதியர்களான மோஹித் சவுகான் மற்றும் பிரதிபா ஆகியோர் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது திருமணம் ஏப்ரல் 30ம் தேதி நிச்சயக்கப்பட்டது. ஆனால், இருமாநிலத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருந்ததால், இமாச்சல் பிரதேசத்தில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு வரமுடியாத நிலை ஏற்பட்டது. இருதரப்பினரும் ஆலோசனை நடத்தி, கடந்த 1ம் தேதி, மதியம் ஒரு மணிக்கு ‘கூகுள் மீட் ஆப்’ மூலம் திருமணத்தை நடத்தி வைக்க முடிவெடுத்தனர். அதன்படி, கூகுள் மீட் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு இருதரப்பு உறவினர்களும் ஆன்லைனில் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்தனர்’ என்றனர்.

Tags : Bride Uttar Pradesh ,Bride Himachal Pradesh ,Kalyana Ceremony , Groom Uttar Pradesh - Bride Himachal Pradesh; Online Wedding Ceremony: Corona has changed everything
× RELATED இந்தியாவில் பிரதமர் மோடி ஊழல் பள்ளியை...