ரூ.13,000 கோடியில் பிரதமருக்கு புதிய வீடா?.. பிரியங்கா காந்தி ஆவேசம்!

டெல்லி: மக்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டு, ஆக்சிஜன் பற்றாக்குறையாலும், தடுப்பூசி, மருத்துவமனையில் படுக்கைகள், மருந்துகள் பற்றாக்குறையாலும் தடுமாறுகிறார்கள் என காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் மத்திய அரசு செய்யவேண்டிய சிறந்த பணி என்னவென்றால், நாட்டில் உள்ள அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி மக்களைக் காப்பதுதான். ஆனால், அதை விடுத்து, பிரதமர் மோடிக்கு ரூ.13 ஆயிரம் கோடியில் புதிய வீடு கட்டுவதில் மத்திய அரசு ஆர்வம் காட்டுகிறது. மத்திய அரசு எதற்கு முன்னுரிமை கொடுத்துச் செலவிடுகிறது, எங்கு நிதியைத் திருப்புகிறது என்பது மக்களுக்குத் தெரியவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories:

>