×

சிவகாசியில் நுங்கு விற்பனை விறுவிறுப்பு

சிவகாசி: கோடைகாலம் துவங்கியதை முன்னிட்டு சிவகாசியில் நுங்கு விற்பனை விறு விறுப்படைந்துள்ளது. சிவகாசி பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை வெயில்  தாக்கம் அதிகமாக உல்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அனல் காற்று விசி வருகிறது. கோடை வெப்பத்தால் குளிர்பானங்கள் விற்பனை களைகட்டியுள்ளது. சங்கரன்கோவில், வத்திராயிருப்பு, கழுகுமலை போன்ற ஊர்களில் இருந்து வியாபாரிகள் நுங்கு கொண்டு வந்து  விற்பனை செய்கின்றனர். கோடை வெயிலால் அவதிப்படும் மக்கள் இதனை அதிகம் வாங்கி செல்கின்றனர்.

சிவகாசியில் உள்ள முக்கிய சாலைகள், பஜார் பகுதியில் நுங்கு விற்பனையாளர்கள் சாலைஓரம் தற்காலிக கடை அமைத்து நுங்கு விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு நுங்கு ரூ.6 வரை விற்கப்படுகிறது. இதுதவிர பதனீரும் விற்கப்படுகிறது. பதநீர் ரூ.20க்கு விற்கப்படுகிறது. பதனீர் உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை உண்டாக்கும் என்பதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் ஏராளமானோர் அதிகம் வாங்கி செல்கின்றனர்.

Tags : Nugu ,Sivagasi , Sales boom in Sivakasi
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...