'கொரோனாவால் மக்கள் பாதிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' !: நடிகர் சோனு சூட் வேதனை பதிவு..!!

டெல்லி: கொரோனாவால் மக்கள் பாதிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வேதனை தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ம் அலை உச்சமடைந்து வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைகின்றனர். பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனாவால் மக்கள் பாதிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நடிகர் சோனு சூட் வருத்தம் தெரிவித்துள்ளார். 

கொரோனா பரவல் காலத்தில் மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியவர் நடிகர் சோனு சூட். தற்போது மீண்டும் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மருத்துவமனைகளில் உள்ளவர்கள் வெளியேற விரும்புகிறார்கள். மருத்துவமனைகளுக்கு வெளியே நிற்கும் மக்கள் உள்ளே செல்ல விரும்புகிறார்கள் என தெரிவித்துள்ளார். 

மேலும் டெல்லியில் இருந்து படுக்கைகள், ஆக்சிஜனுக்கான கோரிக்கை அதிகமாக வருவதாக சோனு சூட் கூறியுள்ளார். கொரோனா முதல் அலையின் போது புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப உதவிய நடிகர் சோனு சூட், தற்போது இரண்டாம் அலையில் நோயாளிகளுக்கு படுக்கை வசதிகளும், ஆக்சிஜன் சிலிண்டரும் ஏற்பாடு செய்து கொடுத்து கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>