கொரோனா பரவல் காரணமான ஜே.இ.இ நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு்; தேதி பின்னர் அறிவிக்கப்படும்: தேசிய தேர்வு முகமை

டெல்லி: பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளில் சேர நடைபெறும் ஜே.இ.இ நுழைவுத்தேர்வு ஒத்திவைத்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஜே.இ.இ மெயின் நுழைவுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜே.இ.இ மெயின் நுழைவுத்தேர்வு மே 24 முதல் 28ஆம் தேதி வரையில் நடைபெற இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜே.இ.இ மெயின் நுழைவுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். 

கொரோனா பரவல் காணமாக 4-வது முறையாக தேசிய தேர்வு முகமை ஒத்திலைத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தற்போதைய நிலைமையை அறிந்து, தேர்வர்கள் மற்றும் தேர்வு செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வையும் கணக்கில் கொண்டு JEE முதன்மை தேர்வுகள் 2021ம் ஆண்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறியுள்ளது. புதிய தேதிகள் தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>