×

கோவை ஆக்சிஜன் தயாரிப்பு ஆலையில் மூலப்பொருட்கள் பற்றாக்குறை காரணமாக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கோவை: கோவை ஆக்சிஜன் தயாரிப்பு ஆலையில் மூலப்பொருட்கள் பற்றாக்குறை காரணமாக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அடுத்ததாக கோவையில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அங்குள்ள பல தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகளும் அவதியுற்று வருகின்றனர்.
 
இந்நிலையில் கோவையில் உள்ள ஆக்சிஜன் ஆலையில் மூலப்பொருட்கள் பற்றாக்குறை காரணமாக ஆக்சிஜன் தயாரிப்பு முற்றிலும் நிறுத்தப்படும் நிலை உள்ளது. குறிப்பாக கேரளா, பெங்களூரு மற்றும் பெருந்துறையிலிருந்து தினமும் 14 டன் திரவ ஆக்சிஜன் நிரப்பப்பட்டு வந்த நிலையில் தற்போது 4 முதல் 5 டன் மட்டுமே அனுப்பப்படுகிறது. இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் குணமடைபவர்களை விட தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே அங்குள்ள பலர் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இந்த ஆலையிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டால் மேலும் நெருக்கடியான சூழல் ஏற்படும் நிலை உள்ளது. இதேபோல் நாகை மாவட்ட மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.



Tags : Coe Oxygen Manufacturing Plant , Oxygen
× RELATED மக்களவை தேர்தலில் தீவிர பிரச்சாரம்...