பதவியேற்புக்கு முன்பே மக்கள் பணியை தொடங்கிவிட்டார் மு.க.ஸ்டாலின்!: கி.வீரமணி புகழாரம்..!!

சென்னை: பதவியேற்புக்கு முன்பே மக்கள் பணியை மு.க.ஸ்டாலின் தொடங்கிவிட்டார் என்று கி.வீரமணி புகழாரம் சூட்டியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு நடவடிக்கையாக மட்டுமல்லாமல் மக்கள் இயக்கமாக மாற்றும் நடவடிக்கையில் தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள மு.க. ஸ்டாலின் ஈடுபட்டிருப்பதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார். தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக முதல்வராக வருகின்ற 7ம் தேதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொள்ள இருந்தாலும் மக்கள் ஆணையை ஏற்று மக்கள் பணியாற்ற நேற்றே தொடங்கிவிட்டதாக தெரிவித்தார். மத கிருமி, சாதி கிருமிகளை ஒழித்து தமிழகத்தை சமத்துவபுரமாக மாற்ற வேண்டிய கடமை இருந்தாலும் கொரோனா தொற்று கடுமையாக பரவி வரும் சூழலில், மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாப்பதே தனது முதற்கடமையாக, ஆட்சியின் முதல் சவாலாக ஸ்டாலின் கொண்டிருப்பதாக அவர் கூறினார். 

அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆட்சி மாற்றம் தேவை என வாக்களித்த மக்களின் எண்ணத்தை செயலாக்குவோம் என்று தெரிவித்தார். 

Related Stories:

>