மெக்சிகோவில் மேம்பாலத்துடன் விழுந்து நொறுங்கிய மெட்ரோ ரயில்!: 20 பேர் பலி... 70க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

மெக்சிகோ: மெக்சிகோவில் பறக்கும் ரயில் மேம்பாலம் இடிந்து மெட்ரோ ரயில் சாலை மீது விழுந்து நொறுங்கிய கோர விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். மெக்சிகோ நகரில் உள்ள பறக்கும் ரயில் மேம்பாலம் நேற்று இரவு திடீரென உடைந்து நொறுங்கியது. அப்போது மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த ரயிலும் மேம்பாலத்துடன் சேர்ந்து சாலையில் சென்ற கார்கள் மீது விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் சிக்கிய கார்கள் துண்டு துண்டாக சிதறின. காரில் சிக்கிய 20 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நிகழ்விடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இடிபாடுகளில் சிக்கி 70க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்துடன் பறக்கும் ரயில் இடிந்து விழும் காட்சிகள் அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகியுள்ளது. பறக்கும் ரயில் சாலையில் விழுந்து நொறுங்கியதால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. 

தரமற்ற மெட்ரோ ரயில் பறக்கும் மேம்பாலம் மெக்சிகோவின் தற்போதைய வெளியுறவு அமைச்சரான மாசிலோ இபாட், மெக்சிகோ நகரின் மேயராக இருந்த போது கட்டப்பட்டதாகும். விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அனுதாபம் தெரிவித்துள்ள மாசிலோ இபாட், மேம்பாலம் இடிந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

Related Stories: