டெல்லியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 மாத ரேஷன் இலவசம்!: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு..!!

டெல்லி: டெல்லியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 மாதங்களுக்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து அம்மாநிலத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 மாதங்களுக்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதன் பொருள் 2 மாதங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளது அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். 

இதன் மூலம் 72 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

Related Stories:

>