பிரதமருக்கான புதிய இல்லம் 2022 டிசம்பரில் தயாராகிறது!: கொரோனா பரவும் போது இது தேவையா என எதிர்க்கட்சிகள் விமர்சனம்..!!

டெல்லி: டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமரின் புதிய இல்லத்துக்கான கட்டுமான பணிகள் 2022ம் ஆண்டு இறுதிக்குள் தயாராகும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவும் போது இது தேவையா என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். தலைநகர் டெல்லியில் நவீன வசதிகளுடன் புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு நாடாளுமன்ற கட்டிடம், மத்திய அரசின் அலுவலகங்கள், பிரதமர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஆகியோருக்கான இல்லங்கள் கட்டப்படுகின்றன. இந்த திட்டத்திற்காக 13,450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, டாடா குழுமத்திடம் கட்டுமானத்திற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. 

டெல்லியில் கொரோனா 2ம் அலை தீவிரமாக உள்ள போது பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து இதனை கட்ட வேண்டுமா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகம் கட்டுவதற்காக சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது. அதில் பிரதமரின் புதிய இல்லத்துக்கான கட்டுமான பணிகள் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இறுதியாகும் என உத்தேசமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories:

>