மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் !

சென்னை: திமுக  இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அபார வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து, திமுகவின்  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெறவுள்ளார். இந்த சந்திப்பு நிகழ்வுகள் காலை 11.15 மணி முதல் தொடங்குகின்றன.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ்.அழகிரி அவர்களை  நந்தனத்தில் (டவர் பிளாக்) உள்ள அவரது இல்லத்தில் கழக இளைஞரணி செயலாளர் அவர்கள் சந்திக்கிறார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி.யை அவரது அண்ணா நகர் இல்லத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்களை தி.நகர் வைத்தியராமன் தெருவில் உள்ள சி.பி.ஐ (எம்)  மாநிலக்குழு அலுவலகத்திலும்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்களை அக்கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான தி.நகர் பாலன் இல்லத்திலும் கழக இளைஞரணி செயலாளர் அவர்கள் சந்திக்கிறார். அதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. அவர்களை வெளிச்சம் தொலைக்காட்சி அலுகலகத்திலும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் அவர்களை அவரது வளசரவாக்கம் இல்லத்திலும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சந்திக்கவுள்ளார்.

Related Stories:

More