தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலை ஏறுமுகம்

சென்னை: தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலையை என்னை நிறுவனங்கள் உயர்த்த தொடங்கிவிட்டன. 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்புக்கு ஒரு நாளுக்கு முன்பு அதாவது பிப்ரவரி 27-ம் தேதி முதல் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படவில்லை பெட்ரோல் விலையேற்றம் தேர்தல் முடிவுகளை பாதிக்கும் என்பதால் மத்திய அரசின் வாய் மொழி உத்தரவை ஏற்று எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யவில்லை.

தேர்தல் நடைபெற்ற மார்ச் மேட்டரும் ஏப்ரல் மாதங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் 4 முறை எரிபொருள் விலை பைசாக்களில் மட்டும் சற்று குறைக்கப்பட்டது. கடைசியாக ஏப்ரல் 15-ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகளும், டீசல் லிட்டருக்கு 14 காசுகளும் குறைக்கப்பட்டன. அன்று முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை எரிபொருள் விலை எட்டப்படவில்லை. தற்போது 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு, 2 நாட்கள் கூட முழுமை பெறாத நிலையில் பெட்ரோல், டீசல் விலை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.92.43 க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.85.75க்கும் விற்பனையானது. இன்று 1 லிட்டர் பெட்ரோல் விலையில் 12 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.92.55 க்கு விற்பனையாகிவருகிறது. டீசல் லிட்டருக்கு ரூ.85.90 க்கு வர்த்தகமாகிவருகிறது. இது நேற்றைய விலையை விட 15 காசுகள் அதிகமாகும். 2021-ம் ஆண்டில் இதுவரை 26 முறை பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.7.58 காசுகளும், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.7.75 காசுகளும் உயர்த்தபட்டுள்ளது.

Related Stories:

>