×

புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் விழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபாடு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 20ம் தேதி பூ சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. கோயில் முன்பாக 15 ஆதி நீளத்தில் குண்டம் தயார் செய்யப்பட்டது. குண்டத்திற்கு பூஜைகள் செய்து முதல் நபராக தலைமை பூசாரி ராஜசேகர் இறங்கினார்.

தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையாக தீ மிதித்து வருகின்றனர். தீ மிதித்த பக்தர்கள் கோயில் கருவறையில் வீணையுடன் சரஸ்வதி அலங்காரத்தில் வீற்றிருந்த பண்ணாரி அம்மனை வழிபட்டனர். குண்டம் இறங்குவதற்காக பண்ணாரி அம்மன் கோயிலில் கடந்த 3 நாட்களுக்கு முன்பிருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

The post புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் விழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Pannari Mariamman Temple Gundam Festival ,Erode ,Sathyamangalam ,Erode district ,
× RELATED ஈரோட்டில் அனுமதியின்றி பிசினெஸ்...