×

உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15.41 கோடியை கடந்தது: தினசரி பாதிப்பிலும் உயிரிழப்பிலும் இந்தியா நம்பர் 1

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13.57 கோடியாக அதிகரித்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆணடு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் முதல் அலை நிறைவடைந்த நிலையில் பல நாடுகளில் வைரசின் இரண்டாவது அலை அதி வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை புரட்டி எடுத்து வருகிறது.  வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பயன்பாட்டிற்கு வந்துள்ளன. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,41 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 15,41,77,380 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 13,15,71,402பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 32 லட்சத்து 26 ஆயிரத்து 858 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா தொற்றுக்கு தற்போது 19,379,120 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,11,453 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்,

அமெரிக்கா - 33,230,561
இந்தியா - 20,275,543
பிரேசில் - 14,791,434
பிரான்ஸ் - 5,656,007
துருக்கி - 4,900,121

Tags : India , Globally, the number of corona victims has crossed 15.41 crore: India is number 1 in daily casualties
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!