திமுக ஆட்சிக்கு வர ஓய்வின்றி உழைத்த உறுப்பினர்களுக்கு நன்றி தலைவரின் கொள்கைகளை ஏற்று செயல்பட வேண்டும்: தொமுச பேரவை சண்முகம் எம்.பி அறிக்கை

சென்னை: திமுக ஆட்சிக்கு வர ஓய்வின்றி உழைத்த தொ.மு.ச. உறுப்பினர்களுக்கு நன்றி. தலைவரின் கொள்கைகளை ஏற்று செயல்பட வேண்டும் என தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற கூட்டணியை அமைத்து, தேர்தலில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க அடித்தளம் அமைத்த ஓய்வறியா உழைப்பாளி, முதல்வர் பதவியை ஏற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

திமுக ஆட்சிக்கு வர வேண்டுமென்று 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொ.மு.ச.உறுப்பினர்கள், குறிப்பாக போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் இரவு பகல் பாராது கடுமையான உழைப்பை தந்து தலைவர் செல்லும் இடமெல்லாம் அவருக்கு ஒரு பாதுகாப்பு அரணாக சீருடை அணிந்து சிறப்பாகப் பணியாற்றிய அனைத்துப் பிரிவுதொழிலாளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. ஆளுகின்ற பொறுப்பை ஏற்றுள்ள நம்முடைய தலைவரின் தலையாய கொள்கைகளை நாம் சிரம்மேல் ஏந்தி கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காத்து தொ.மு.ச. பேரவையின் வழிகாட்டுதல்படி அனைவரும் நடந்து கொண்டு ஆட்சிக்கும், தலைவருக்கும் பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>