×

ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை… சவரன் ரூ.520 உயர்ந்து ரூ. 44,800க்கு விற்பனை; கலக்கத்தில் நகை பிரியர்கள்

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது.

தங்கம், மிகப்பெரிய சொத்தாக மதிக்கப்படுகிறது. ஒருசில நேரங்களில் அது பொருளாதார பாதுகாப்பையும் தருகிறது. நிதி நெருக்கடியின் போது தங்கத்தை விற்று பணமாக்கி கொள்ளவும் முடியும். தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடுகளுக்கு தக்க லாபம் கிடைத்து வருகிறது. இது தவிர, பொதுவாக குடும்பங்களில் தங்க ஆபரணங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாறி கொண்டே இருக்கும். அதனால் தான் குடும்பத்தில் தங்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அளிக்கப்பட்டு வருகிறது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.44,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,600க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 70 காசுகள் அதிகரித்து ரூ.77.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை… சவரன் ரூ.520 உயர்ந்து ரூ. 44,800க்கு விற்பனை; கலக்கத்தில் நகை பிரியர்கள் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,South India ,Dinakaran ,
× RELATED தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று...