×

ஈரோட்டில் 40 ஆண்டுக்குபின் காங்கிரஸ் போட்டி பெரியார் பிறந்த மண்ணில் வாகைசூடிய கொள்ளுப்பேரன்

ஈரோடு: தி.மு.க. கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் வேட்பாளராக தந்தை பெரியாரின் கொள்ளுப்பேரனும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவெரா போட்டியிட்டார். இவர் 67,300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஈரோடு தொகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை. 40 ஆண்டுகளுக்கு பின்பு காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு ஈரோட்டில் வெற்றி பெற்றிருப்பது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல பகுத்தறிவை மக்களிடம் கொண்டு சென்ற தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் அவரது கொள்ளுப்பேரன் வெற்றி பெற்றிருப்பது திராவிட இயக்கத்தினரிடையே எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Erode ,Congress ,Periyar , After 40 years in Erode, the Congress rival Periyar was born in the soil
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...