திமுக அமோக வெற்றி நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய பெண் தொண்டர்: பரமக்குடியில் உருக்கம்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே பொதுவகுடியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி வனிதா (32). இரு குழந்தைகள் உள்ளனர். இவரும் பெற்றோரும் பாரம்பரியமாக திமுக தீவிர பற்றாளர்கள். சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வரானால், தனது நாக்கை அறுத்து உண்டியலில் காணிக்கை செலுத்துவதாக பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் வனிதா வேண்டியிருந்தார். அதன்படி, திமுக அமோக வெற்றி பெற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். இதையடுத்து நேற்று காலை கோயிலுக்கு வந்த வனிதா காணிக்கை செலுத்த தனது நாக்கை கத்தியால் அறுத்துக் கொண்டார். அவரை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>