×

நிலக்கரி சுரங்கமாகிறதா நெல் வயல்கள்?: தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு திட்டம்?.. விவசாயிகள் எதிர்ப்பு..!!

தஞ்சை: தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றிய அரசு நிலக்கரி எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடசேரி, மகாதேவப்பட்டணம், உள்ளிக்கோட்டை, குப்பச்சிக் கோட்டை, பரவன்கோட்டை, கீழ்க்குறிச்சி ஆகிய இடங்கள் தேர்வு என கூறப்படுகிறது. பரவத்தூர், கொடியாளம், அண்டமி, நெம்மேரி உள்ளிட்ட இடங்களில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்க விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வடசேரி நிலக்கரி திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நிலக்கரி எடுக்கும் ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிராக மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டையில் விவசாயி சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். மின்சார தட்டுப்பாட்டை காரணம் காட்டி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிலக்கரி எடுக்க விவசாயிகள் எதிர்ப்பு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகள் திட்டத்தில் இடம்பெற்றுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு அறிவிப்பாணை வெளியிட்டதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நெல் வயல்களை நிலக்கரி சுரங்கமாக்கினால் நாட்டின் உணவு உற்பத்தி பாதிக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

The post நிலக்கரி சுரங்கமாகிறதா நெல் வயல்கள்?: தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு திட்டம்?.. விவசாயிகள் எதிர்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Paddy Fields ,Union Govt ,Tamilnadu ,Thanjavur ,Union government ,Tamil Nadu ,Thanjavur District ,Orathanadu ,
× RELATED NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின்...