×

ரூ.570 கோடி தடுப்பு மருந்து நன்கொடை: பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி இந்தியாவுடன் பைசர் ஆலோசனை

புதுடெல்லி: கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு பைசர் நிறுவனம் ரூ.570கோடி மதிப்புள்ள கொரோனா சிகிச்சை மருந்துகளை நன்கொடையாக வழங்குகின்றது. கொரோனா இரண்டாவது அலையின் பிடியில் இந்தியா சிக்கி தவித்து வருகின்றது. இதனையொட்டி இந்தியாவிற்கு உலக நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றது. 40 நாடுகள் மருத்துவபொருட்களை அனுப்பிவைத்து உதவிகரம் நீட்டியுள்ளது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவை சேர்ந்த பிரபல நிறுவனமான பைசர் ரூ.570கோடி மதிப்புள்ள கொரோனா சிகிச்சை மருந்து பொருட்களை இந்தியாவிற்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பைசர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஒ ஆல்பர்ட் போர்லா இந்தியாவில் உள்ள நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் ,”அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியாவில் உள்ள விநியாக மையங்களில் இருந்து பைசர் மருந்து பொருட்களை இந்தியா அனுப்புவதில் தீவிரமாக இருக்கிறார்கள். துரதிஷ்டவசமாக எங்களது மருந்தை பயன்படுத்துவதற்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்படவில்லை. இதற்காக பல மாதங்களுக்கு முன்பே விண்ணப்பித்துள்ளோம். எனவே பைசர் மருந்துக்கு விரைவாக ஒப்புதல் அளிப்பது தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றோம் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Pfizer ,India , Rs 570 crore vaccine donation: Pfizer consults with India to approve use
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...