ஐகோர்ட் மதுரை கிளை கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராஜினாமா

மதுரை: ஐகோர்ட் மதுரை கிளையில் கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாக பணியாற்றிய இருவர் ராஜினாமா செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கே.செல்லப்பாண்டியன். முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சம்பந்தியான இவர், ஐகோர்ட் மதுரை கிளையில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பணியாற்றினார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளதால், இவர் தனது பதவியை ராஜினாமா செய்து தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கடிதத்தில், தனது சொந்த காரணங்களுக்காக பணியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார். இதனிடையே மற்றொரு கூடுதல் அட்வகேட் ஜெனரலான ஸ்ரீசரண் ரங்கராஜனும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர்களைப் போல, அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் அரசு வக்கீல்களாக நியமிக்கப்பட்ட பலரும் ராஜினாமா செய்து வருகின்றனர்.

Related Stories:

>