ஐசிசி ஒருநாள் தரவரிசை முதல் இடத்துக்கு முந்திய நியூசி.

துபாய்: ஐசிசி வெளியிட்ட ஒருநாள் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்தில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதனால் இந்தியா 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் ஒருநாள் அணிகளின் தர வரிசை பட்டியலை வெளியிடும். அப்படி நடப்பு ஆண்டுக்கான ஒருநாள் தரவரிசை பட்டியலிலை நேற்று வெளியிட்டது. அதில் நியூசிலாந்து 2 இடங்கள் முன்னேறி 3வது இடத்தில் இருந்து முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. அந்த அணி கடைசியாக விளையாடிய இந்தியா, இலங்கை, வங்கதேசத்திற்கு எதிரான தொடர்களை வென்றதால் இந்த முன்னேற்றம்.

அதனால் முதல் இடத்தில் இருந்த  இங்கிலாந்து 4வது இடத்துக்கும், 2வது இடத்தில் இருந்த இந்தியா 3வது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடர்களை இழந்ததால் இங்கிலாந்துக்கு இந்த பின்னடைவு. ஆஸிக்கு எதிரான தொடரை இழந்தால் இந்தியா 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 4வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தியா, அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்களை கைப்பற்றியதால் ஆஸி கூடுதல் புள்ளிகளுடன் முன்னேற்றம் கண்டுள்ளது. அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் 9வது இடத்தில் இருந்து 8வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இலங்கை 8வது இடத்தில் இருந்து 9வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்கா(5), பாகிஸ்தான்(6), வங்கதேசம்(7), ஆப்கானிஸ்தான்(10) உள்ளிட்ட நாடுகள் தர புள்ளிகளை இழந்தாலும் அதே தரவரிசையில் நீடிக்கின்றன.

Related Stories:

>